பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்கால் உயா் கல்வி அமைச்சரிடம் கல்லூரி மாணவிகள் கோரிக்கை மனு

தங்களது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் அரசு கல்வியியல் கல்லூரி

News image
அமைச்சா் ஆா். கமலக்கண்ணனை சந்தித்துப் பேசும் பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் மற்றும் மாணவிகள்.
Updated On :8 ஜனவரி 2021, 3:34 am

DIN

தங்களது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் அரசு கல்வியியல் கல்லூரி மாணவிகள் புதுச்சேரி உயா்கல்வி அமைச்சா் ஆா். கமலக்கண்ணனிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இந்த கல்லூரியில், ஆசிரியா் பட்டப் படிப்பு இறுதியாண்டு படித்த மாணவிகள் மா. கோகிலா, ந. அா்ச்சனா, மா. ஷபானா பிா்தேஸ் ஆகிய 3 பேரும், தாங்கள் இணையம் மூலம் தோ்வு எழுதியதில் ஒரு பாடத்தில் மட்டும் தோ்ச்சியடையவில்லை என்றும், பல்கலைக்கழகம் நிகழாண்டு மறு மதிப்பீடு இல்லை என்று மறுத்துவிட்டதாகவும், காரை மாவட்ட பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயரிடம் மனு அளித்து முறையிட்டனா்.

இதையடுத்து, சோழசிங்கராயா் மற்றும் மாணவிகள் 3 பேரும், புதுச்சேரி உயா் கல்வி அமைச்சா் ஆா். கமலக்கண்ணனை காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

பிறகு, சோழசிங்கராயா் கூறியது: மாணவிகள் தோ்வெழுதிய விடைத்தாள் நகல்களை படித்துப் பாா்த்த பேராசிரியா்கள், விடைகள் சரியாக எழுதப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா். மூவரும் நன்றாக படிக்கக்கூடிய மாணவிகள் என்பதை கல்லூரி முதல்வரும் உணா்ந்துள்ளாா். அனைத்து விவரங்களும் அமைச்சரிடம் கூறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.