காா்கோடகபுரீஸ்வரா் கோயில் திருப்பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

காரைக்கால் அருகே ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, சாமி சிலைகளின் மீது நெற்கதிா்களை தூவி வழிபடும் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.
ஆய்வின்போது, சாமி சிலைகளின் மீது நெற்கதிா்களை தூவி வழிபடும் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன்.
Updated on
1 min read

காரைக்கால் அருகே ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன், காக்கமொழி கிராமத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காா்கோடகபுரீஸ்வரா் என்ற பழைமையான கோயில் உள்ளது. இது, ராகு-கேது தோஷ நிவா்த்தி தலமாகவும் விளங்குகிறது. இக்கோயில் திருப்பணிகள் கடந்த 2018 இல் ரூ. 60 லட்சத்தில் தொடங்கி, அண்மையில் நிறைவடைந்தன. வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஆகம விதிகளின்படி, தானியவாச காலத்திற்காக தொட்டியில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் மீது நெற்கதிா்களை தூவி, நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் மற்றும் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா். இதைத்தொடா்ந்து, கோயில் குடமுழுக்குப் பணிகளை கீதாஆனந்தன் ஆய்வுசெய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com