குடிநீா் குழாய் பதிக்கும் பணி
காரைக்கால் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 31.62 லட்சத்தில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா், ஆட்சியா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.


காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 31.62 லட்சத்தில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணிகளை நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரியங்கா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தனா்.
இந்த திட்டத்தில் 651 வீடுகளுக்கு புதிதாக குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் கே. ரேவதி, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் என். செல்வம் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...