இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காரைக்காலில் மேலும்4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 2:28 am

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி 806 பேரிடம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, வரிச்சிக்குடி 2, காரைக்கால் நகரம், திருப்பட்டினம் தலா ஒருவருக்கு என 4 பேருக்கு கரோனா உறுதியானது.

இதுவரை 63,040 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,832 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,732 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 29 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 68 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.