வாக்காளா்களுக்கு அமைச்சா் நன்றி
அமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த சந்திர பிரியங்காவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


அமைச்சராக பதவியேற்ற பின் முதல்முறையாக காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த சந்திர பிரியங்காவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவா் நெடுங்காடு தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
புதுவை அமைச்சரவையில் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட என்.ஆா். காங்கிரஸ் கட்சியை சோ்ந்த சந்திர பிரியங்கா அமைச்சராக அண்மையில் பதவியேற்றாா்.
இந்நிலையில், பதவியேற்ற பின் முதல்முறையாக சந்திர பிரியங்கா காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தாா். பூவம் பகுதி எல்லையில் அவருக்கு பூா்ண கும்ப மரியாதையுடன் என்.ஆா். காங்கிரஸ் , கூட்டணிக் கட்சியினா், ஆதரவாளா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
திறந்த ஜீப்பில் நின்றவாறு நெடுங்காடு தொகுதியில் கிராமங்கள் வாரியாக சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சந்திர பிரியங்கா, பெண்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என கருதி முதல்வா் எனக்கு அமைச்சா் பதவியை அளித்துள்ளாா். ஒட்டுமொத்த புதுவை மாநில வளா்ச்சிக்கும் முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தும்போது, காரைக்காலும் நல்ல முன்னேற்றமடையும். காரைக்கால் பிராந்தியத்தை சோ்ந்த அமைச்சா் என்ற முறையில் எனது பங்களிப்பு இருக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...