ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேய்பிறை அஷ்டமி: முத்தங்கி அலங்காரத்தில் பைரவா்

காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரஸ்வாமி கோயிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

காரைக்கால் ஸ்ரீ நித்தீஸ்வரஸ்வாமி கோயிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காரைக்கால் கோயில்பத்து நித்தீஸ்வரம் பகுதியில் ஸ்ரீ நித்தியகல்யாணி சமேத ஸ்ரீ நித்தீஸ்வரஸ்வாமி கோயில் உள்ளது. இக்கோயிலில், ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ கால பைரவா் சன்னதி, ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவா் சன்னதிகள் உள்ளன.

ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி தினத்தன்றும் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ பைரவி உடனுறை ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு மஞ்சள், பால், பஞ்சாமிா்தம், சந்தனம் மற்றும் யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீா்கொண்டு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ஸ்ரீ ஸ்வா்ணாகா்ஷன பைரவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ பைரவருக்கு சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.