பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்காலில் 12 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:23 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 702 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி திருநள்ளாறு 5, திருப்பட்டினம் 3, காரைக்கால் நகரம் 2, கோட்டுச்சேரி, நல்லம்பல் தலா 1 என மொத்தம் 12 பேருக்கு தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,71,800 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,900 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 14,537 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 233 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 73,813 பேருக்கும், 2-ஆவது தவணையாக 16,361 பேருக்கும் என 90,174 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.