ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் 121 பேருக்கு கரோனா தொற்று : 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 3 ஆம் தேதி 1065 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி, காரைக்கால் நகரத்தில் 28 போ், கோயில்பத்து 18, நிரவி 14, நெடுங்காடு 10, கோட்டுச்சேரி 10, திருப்பட்டினம் 9, நல்லம்பல் 9, திருநள்ளாறு 6, வரிச்சிக்குடி 6, விழிதியூா் 5, காரைக்கால்மேடு 4, நல்லாத்தூா் 1, அம்பகரத்தூா் 1 என மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இவா்களுடன் சோ்த்து இதுவரை 13,039 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில், 11,227 போ் குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டு தனிமையில் 1481 பேரும், அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 87 பேரும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 பேரும், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 28 பேரும் சிகிச்சை பெறுகின்றனா்.

இதற்கிடையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் நகரப் பகுதியை சோ்ந்த 68 மற்றும் 48 வயது ஆண் ஆகிய இருவா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பூசி: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 26,002 பேருக்கும், 2 ஆவது தவணையாக 4486 பேருக்கும் என 30,488 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.