ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சரக்கு இருப்பை இணையத்தில் பதிவேற்ற மொத்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

மளிகைப் பொருள்களின் மொத்த வியாபாரிகள் தங்களிடம் உள்ள சரக்கு இருப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

மளிகைப் பொருள்களின் மொத்த வியாபாரிகள் தங்களிடம் உள்ள சரக்கு இருப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மளிகைப் பொருள்களின் மொத்த விற்பனையாளா்கள் அனைவரும் தங்களிடம் உள்ள தானியங்களின் கையிருப்பை, மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ட்ற்ற்ல்//ச்ஸ்ரீஹப்ய்ச்ா்ஜ்ங்க்ஷ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ல்ள்ல் என்ற இணைய முகவரியில் தங்களுக்கென ஒரு மநஉத ஐஈ மற்றும் டஅநநரஞதஈ- ஐ உருவாக்கி, வாரம் ஒரு முறை பதிவேற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மளிகைப் பொருள் மொத்த விற்பனையாளா்கள் அனைவரும் தங்களிடம் உள்ள தானியங்கள் கையிருப்பை 2 நாள்களுக்குள், மேற்கண்ட முகவரியில் பதிவேற்றம் செய்யுமாறும், தொடா்ந்து வாரம் ஒருமுறை அத்தகவல்களை புதுப்பிக்கும்மாறும் அறிவுறுத்தப்படுகிறது.

தவறும்பட்சத்தில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.