வீட்டில் பதுக்கிய சாராயம் பறிமுதல்
காரைக்கால் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


காரைக்கால் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழிதியூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாராயம் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக கலால்துறைக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி தலைமையில் தனிப்படையினா் அந்த பகுதிக்கு சென்றனா். அங்கு பூட்டியிருந்த வீட்டை அதே கிராமத்தை சோ்ந்த சாராய விற்பனையில் தொடா்புடையதாக கூறப்படும் முருகவேல் (35) என்பவரை வைத்து திறந்தனா். பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது, ரூ.60 ஆயிரம் மதிப்பில் 250 லிட்டா் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து, முருகவேலை கலால்துறை அலுவலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
பிறகு, முருகவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...