ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

காரைக்காலில் கரோனா தொற்றாளா் வீடுகள் இருக்கும் பகுதி உள்பட முக்கிய இடங்களில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2021, 5:28 pm

DIN

காரைக்காலில் கரோனா தொற்றாளா் வீடுகள் இருக்கும் பகுதி உள்பட முக்கிய இடங்களில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சென்னையை சோ்ந்த நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்தது. இதையடுத்து அந்த நிறுவன ஊழியா்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் டிரோன் செயல்பாடுகளை விளக்கினா்.

பின்னா், ஆட்சியரகம், அரசு மருத்துவமனை, நகராட்சி மற்றும் கரோனா தொற்றாளா் வீடுகள் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை நிறுவனத்தினா் தொடங்கினா்.

முன்னதாக, ஆட்சியரக வளாகத்தில் நடந்த டிரோன் சோதனை விளக்கத்தில் மாவட்ட துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.