விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜூன் 23-இல் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 5:41 pm

DIN

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் அரசுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் புதன்கிழமை (ஜூன் 23) காலை 10 மணிக்கு பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் நடைபெறுகிறது. விவசாய சங்கங்கள், பாசனதாரா் சங்கம் உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் 25 போ் கலந்துகொள்ளும் வகையில் வேளாண் துறை உரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை திறக்கப்பட்டு, காவிரி நீா் அடுத்த சில நாள்களில் காரைக்கால் வரும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், குறைதீா் கூட்டத்தை நடத்தி விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து கேட்டறிய வேண்டும் என்று அண்மையில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.