தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா: மேலும் 2 நாள்கள் நீட்டிப்பு

காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நலவழித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நலவழித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் கடந்த 16 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்ற கரோனா தடுப்பூசித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பயனடைந்ததால், அதை மேலும் நீட்டிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் சனிக்கிழமை கூறியது:

கடந்த 4 நாள்களாக நடைபெற்றுவந்த தடுப்பூசித் திருவிழா நலவழித் துறை செயலா் உத்தரவின்படி, ஜூன் 20, 21 என மேலும் 2 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோா் தங்களது அடையாள அட்டையுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

20 ஆம் தேதி மையங்கள்: அரசு தொடக்கப் பள்ளி நேரு நகா், அம்மையாா் கலையரங்கம், காரைக்கால்மேடு சமுதாயக்கூடம், நல்லாத்தூா் அரசு தொடக்கப் பள்ளி, கீழபருத்திக்குடி அங்கன்வாடி மையம், கீழகாசாக்குடி சீதளாதேவி அம்மன் கோயில் வளாகம், திருவேட்டைக்குடி காலனி தெரு சமுதாயக்கூடம், அம்பகரத்தூா் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி, சுப்ராயபுரம் அரசு தொடக்கப் பள்ளி, விழிதியூா் மாரியம்மன் கோயில் பகுதி அங்கன்வாடி மையம், சேத்தூா் சமுதாயக்கூடம், கீழவாஞ்சூா் அரசு தொடக்கப் பள்ளி, மதகடி காமராஜா் வளாகம்.

21 ஆம் தேதி மையங்கள்: அரசு தொடக்கப் பள்ளி பி.கே.சாலை, காரைக்கால் நகராட்சி திருமண மண்டபம் அருகேயுள்ள இந்திய மருத்துவ முறை மருத்துவ மையம், அம்மன்கோயில்பத்து பொது சேவை மையம், கொட்டப்பாக்கம் சமுதாயக்கூடம், மேலகாசாக்குடி நடுநிலைப் பள்ளி, கோட்டுச்சேரி ஜீவாநகா் அரசு தொடக்கப் பள்ளி, ராயன்பாளையம் சமுதாயக்கூடம், அம்பகரத்தூா் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி, கருக்கன்குடி அரசு நடுநிலைப் பள்ளி, கன்னிக்கோயில் தெரு அங்கன்வாடி மையம், கண்ணாப்பூா் அரசு தொடக்கப் பள்ளி, மேலவாஞ்சூா் அரசு தொடக்கப் பள்ளி, நடுக்களம்பேட் அரசு தொடக்கப் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.