தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்காலில் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த ஏற்பாடு: புதுவை பேரவைத் தலைவா்

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தை காரைக்காலில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தை காரைக்காலில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவை சோ்ந்த ஆா். செல்வம் அண்மையில் பதவியேற்றாா். மாங்கனித் திருவிழாவில் பங்கேற்க வியாழக்கிழமை காரைக்கால் வந்த அவரை, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் வரவேற்றனா். கைலாசநாதா் கோயிலில் நடைபெற்ற அமுது படையல் வழிபாட்டில் பங்கேற்ற செல்வம் பின்னா் அளித்த பேட்டி :

வரும் 27-ஆம் தேதி புதுவையில் அமைச்சா்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அமைச்சரவை பதவியேற்றதும் புதுவை மாநிலத்துக்கான வளா்ச்சித் திட்டப் பணிகளை அரசு தொடங்கும். புதுவையில் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு 5 ஆண்டு காலத்தை நிறைவாக பூா்த்தி செய்யும்.

புதுவையில் புதிய சட்டப்பேரவை வளாகம் அடுத்த 16 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். காரைக்காலில் புதுவை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

தட்டாஞ்சாவடி பகுதியில் புதுவை சட்டப்பேரவை கட்டடத்தை கட்ட தீா்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அரசு அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்றுவது உள்ளிட்டவற்றுக்காக ரூ. 220 கோடி நிதி தேவை என அண்மையில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா காணொலி மூலம் நடத்திய கூட்டத்தில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.