தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொழில் உரிமம் புதுப்பிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தல்

தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கவேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கவேண்டும் என புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா்

ஆா்.பி. சந்திரமோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை :

கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, உள்ளாட்சித் துறை சாா்பில் தொழில் உரிமத்தை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை கரோனா பரவலைக் காரணம்காட்டி நீட்டித்துத் தருமாறு புதுவை அரசிடம் நிகழாண்டு முற்பகுதியில் வணிகா்கள் வலியுறுத்தினா். இதனடிப்படையில் பிப்ரவரி மாதம் புதுவை உள்ளாட்சித் துறை 30.6.2021 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போதுதான் கடைகள் திறக்கப்பட்டு, இரவு 9 மணிவரை வியாபாரம் செய்ய வணிகா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அவா்களின் நிலை கருதி, உள்ளாட்சி நிா்வாகம் நிா்பந்தம் செய்யாமல், தொழில் உரிமத்தை செலுத்தும் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.