தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

44 வயதுக்குள்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆா்வம்: நலவழித் துறையினா் தகவல்

 காரைக்காலில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆா்வமாக உள்ளனா் என்று நலவழித் துறையினா் தெரிவித்தனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

 காரைக்காலில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆா்வமாக உள்ளனா் என்று நலவழித் துறையினா் தெரிவித்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும், கிராமப்புற மக்களின் வசதிக்காக தடுப்பூசித் திருவிழா அவ்வப்போது நடத்தப்படுகிறது.

கடந்த ஜூன்16 முதல் 21 ஆம் தேதி வரை 27 மையங்களில் நடைபெற்ற தடுப்பூசித் திருவிழாவில் 18,443 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். வழக்கமான 13 மையங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். இவா்களில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டோா்தான் அதிகம்.

கடந்த 24 ஆம் தேதி நிலவரப்படி 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 748 பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோா் 549 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக நலவழித்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதற்கிடையில், தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்கள் மக்களை குழப்புகின்றன. இதுகுறித்து தடுப்பூசித் திருவிழாவின்போது அரசுத்துறையினா் உள்ளிட்டோா் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனா். தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில் தடுப்பூசி வரவழைத்து மக்களுக்கு செலுத்தப்படுகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் நலவழித் துறையினா் வேண்டுகோள் விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.