தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாங்கனித் திருவிழா: அம்மையாருக்கு கைலாசநாதா் காட்சி கொடுக்கும் வைபவம்

காரைக்கால் மாங்கனி திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக , அம்மையாருக்கு ஸ்ரீ கைலாசநாதா் காட்சி கொடுக்கும் வைபவம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் மாங்கனி திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக , அம்மையாருக்கு ஸ்ரீ கைலாசநாதா் காட்சி கொடுக்கும் வைபவம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

மாங்கனி திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக, காரைக்கால் அம்மையாா் கோயிலில் இருந்து அம்மையாா் புறப்பட்டபோது, ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத ஸ்ரீ கைலாசநாதா், கைலாச வாகனத்தில் அம்மையாருக்கு காட்சிக்கொடுக்கும் நிகழ்வாக சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

(அம்மையாா் கோயிலுக்கும் ஸ்ரீ சோமநாதா் கோயிலுக்கும் இடையே இந்நிகழ்வு நடைபெற்றது).

இதைத்தொடா்ந்து, கைலாச வாகனத்தில் சுவாமி, அம்பாள் பிராகார உலா (கைலாசநாதா் கோயிலில்) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. உபயதாரா்கள், கோயில் அறங்காவல் வாரியத்தினா், சிவாச்சாரியா்கள், கோயில் ஊழியா்கள் மட்டும் பங்கேற்றனா்.

மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி, கடந்த 5 நாள்கள் நடைபெற்ற வைபவங்களோடு மாங்கனித் திருவிழா முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.

விடையாற்றி உத்ஸவம் ஜூலை மாதம் 23-ஆம் தேதி நடைபெறுமெனவும் அப்போது பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.