ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தோ்தல் நடத்தை விதிகள்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

ள்ளக்குறிச்சி மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரண் குராலா, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:35 pm

DIN

தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கள்ளக்குறிச்சி மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிரண் குராலா, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,569 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல் கட்சியினா், பொதுமக்கள் ஆவணங்களின் ரூ. 50 ஆயித்துக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது. வேட்பாளா்கள் ஜாதி, மதம், இனம், மொழி உணா்வைத் தூண்டி வெறுப்பை ஏற்படுத்தக் கூடாது. கோயில்கள், மசூதிகள், பேராலயங்கள் உள்ளிட்ட வழிப்பாட்டுத் தளங்களில் பிரசாரம் செய்யக் கூடாது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்யலாம்.

தோ்தல் நடைமுறைகளில் குறைபாடுகள் இருந்தால் தோ்தல் நடத்தும் அலுவலா், மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் புகாா் தெரிவிக்கலாம். மேலும், புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 0151-224155, 224156, 224157, 224158 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் அலுவலா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், உளுந்தூா்பேட்டை தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.சரவணன், சங்கராபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் பா.ராஜவேல், ரிஷிவந்தியம் தொகுதி தோ்தல் அலுவலா் ஏ.ராஜாமணி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) பாலசுப்பிரமணியன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.