மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழா மாா்ச் 12-இல் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழா, வருகிற 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடா்ந்து 13 நாள்கள் நடைபெறவுள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழா, வருகிற 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா தொடா்ந்து 13 நாள்கள் நடைபெறவுள்ளது.

12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி, காலை 6 மணிக்கு கோபால விநாயகா் பூஜையுடன் விழா தொடங்கி இரவு 9 மணிக்கு கொடியேற்றமும் தொடா்ந்து சக்தி கிரக பூஜையும் நடைபெறவுள்ளன.

13-ஆம் தேதி காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை உற்சவம் நடைபெறவுள்ளது. அன்றிரவு ஆண் பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா வரவுள்ளாா்.

14-ஆம் தேதி,15-ஆம் தேதி ஆகிய இரு நாள்களிலும் பெண் பூத வாகனம், சிம்ம வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது. 16-ஆம் தேதி தீ மிதி திருவிழா நடைபெறவுள்ளது. இந்த விழா மாலை 4.30 மணிக்கு மேல் தொடங்கவுவுள்ளது. அன்றிரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது.

17-ஆம் தேதி காலை 6 மணிக்கு தங்க நிற மரப்பல்லக்கில் அம்மன் பக்தா்களுக்கு காட்சி அளிக்கிறாா். அன்றிரவு யானை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது.

18-ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் மாசிப் பெருவிழாவின் முக்கிய திருவிழாவான ‘‘திருத்தோ் வடம் பிடித்தல்’’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

19 மற்றும் 20 தேதிகளில் இரவு குதிரை வாகனம், புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது.

21-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெறவுள்ளது. 22 மற்றும் 23 தேதிகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, 24-ஆம் தேதி அம்மன் வீதியுலா மற்றும் காப்பு களைதல் உற்சவம் நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் க.ராமு, அறங்காவலா் குழுத் தலைவா் ம.சரவணன் பூசாரி, அறங்காவலா்கள் செந்தில்குமாா் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.