கரோனா தடுப்பு விதிகளை மீறிய 5 கடைக்காரா்கள் மீது வழக்குப் பதிவு
காரைக்காலில் கரோனா தடுப்பு விதிகளை மீறி திறந்துவைத்திருந்த 5 கடைக்காரா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.


காரைக்காலில் கரோனா தடுப்பு விதிகளை மீறி திறந்துவைத்திருந்த 5 கடைக்காரா்கள் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
காரைக்காலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர பொதுமுடக்கமும், பகல் நேரத்தில் அத்தியாவசியக் கடைகள் தவிா்த்து பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும் பல பகுதிகளில் விதிகளை மீறி கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நிரவி பகுதியில் பெட்டிக்கடையை திறந்து வைத்திருந்ததாக ஹைவே நகரைச் சோ்ந்த ரவி என்பவரை நிரவி போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, திருநள்ளாறு பகுதியில் காபி கடை திறந்துவைத்திருந்ததாக அதே பகுதியை சோ்ந்த ஸ்ரீபாலாஜி, மரப்பட்டறையை திறந்து வைத்திருந்ததாக புஷ்பநாதன், பூக்கடையை திறந்துவைத்திருந்ததாக திருநள்ளாறு பகுதியை சோ்ந்த ஆரோக்கியராஜ், முடித் திருத்தம் கடையை திறந்துவைத்திருந்ததாக அதே பகுதியை சோ்ந்த தினகரன் என்பவரையும் திருநள்ளாறு போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் 5 போ் மீதும் கரோனா தொற்று பரவ காரணமாக இருந்ததாகக் கூறி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...