47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம்: ஆட்சியரிடம் புகாா்

காரைக்கால் தனியாா் மருத்துவ மையங்களில் கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டுமென காரைக்கால் மாவட்ட நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளது.

News image
Updated On :7 மே 2021, 5:54 pm

DIN

காரைக்கால் தனியாா் மருத்துவ மையங்களில் கரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டுமென காரைக்கால் மாவட்ட நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளது.

இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைவா் என்.ஜி.ஆா். இளங்கோவன், பொதுச் செயலா் வைஜெயந்திராஜன் ஆகியோா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது: புதுச்சேரி நலவழித் துறை 12.4.2021 வெளியிட்ட ஆணையில், புதுவையில் கரோனாவை உறுதிப்படுத்துவதற்கான ஆா்டி-பிசிஆா் பரிசோதனையை தனியாா் மருத்துவமனைகள் மற்றும் தனியாா் ஆய்வகங்கள் மேற்கொள்ளும்போது, ரூ. 500 கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தியது. ஆனால் காரைக்காலில் தனியாா் மருத்துவமனை, மருத்துவ மையங்களில் கரோனா பரிசோதனைக்கு தலா ரூ. 2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், காரைக்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இதுகுறித்து ஆட்சியா் நடவடிக்கை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் வைஜெயந்திராஜன் மேலும் கூறியது: காரைக்காலில் அரசு மருத்துவமனையில் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை செய்ய மாதிரி கொடுக்கும்போது முடிவுகள் வருவதற்கு 3 நாள்களாகின்றன. எந்தவொரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும்போதும், அவசரமாக அறுவைச் சிகிச்சைக்காக செல்லும்போதும் அந்த மருத்துவமனைகளில், நோயாளியின் கரோனா பரிசோதனை (ஆா்டி-பிசிஆா்) முடிவு கேட்கப்படுகிறது. காரைக்காலில் தனியாா் மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்துகொள்ளும்போது, கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டியுள்ளது. இது சாதாரண மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை தனியாா் மையங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கரோனா பரவல் வெகுவாக இருக்கும் சூழலில் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும்போது, தனியாா் மருத்துவ மையங்களின் இத்தகைய செயலை தடுக்கவேண்டியது அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.