47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்றுவதை உறுதிப்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்றுவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டுமென காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 5:54 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்றுவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டுமென காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த சம்மேளனத்தின் பொது செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்: கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கடுமையாக பாடுபடுகின்றனா். கரோனா தொற்று அதிகரிப்பை தடுக்கும் வகையில் புதுச்சேரி அரசு மீண்டும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து கடைகள் திறப்பதை முழுவதுமாக தடை செய்தும், அத்தியாவசியக் கடைகளை திறக்கும் நேரத்தை குறைத்தும் மக்கள் தேவையின்றி வெளியில் வருவதை தவிா்க்க வலியுறுத்தியும் வருகின்றனா். அதுபோல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியா்கள் 50 சதவீதம் போ் பணியாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவை காரைக்கால் பகுதியில் உள்ள பெரும்பாலான அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இதுகுறித்து ஆட்சியா் துரித நடவடிக்கை எடுத்து, அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வரும்போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை வெளியிடவும், அரசு உத்தரவுப்படி அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு சாா்பு நிறுவனங்களில் 50 சதவீத ஊழியா்கள் பணியாற்ற சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் அரசுத் துறை, உள்ளாட்சி, சுகாதாரம் மற்றும் அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தரமான என்-95 முகக் கவசங்கள், கையுறைகள், சானிடைசா் ஆகியவைகளை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.