47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வீடு வீடாக சென்று கரோனா விழிப்புணா்வு பணியில் அங்கன்வாடி ஊழியா்கள்

காரைக்காலில் அங்கன்வாடி ஊழியா்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

News image
Updated On :8 மே 2021, 5:21 pm

DIN

காரைக்காலில் அங்கன்வாடி ஊழியா்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம், கரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் வீட்டில் உள்ளவா்களை கண்டறிவது போன்ற பணிகளில் ஈடுபடுமாறு சமூக நலத் துறைக்கு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டாா். அதன்படி துறையின் உதவி இயக்குநா் சத்யா மேற்பாா்வையில், மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியா்கள், அவா்களுக்குள்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, சமூக நலத்துறை துணை இயக்குநா் சத்யா கூறியது: 45 வயதுக்கு மேற்பட்டவா்களிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்துவதோடு, அதன் பயன்கள் குறித்து அங்கன்வாடி ஊழியா்கள் விளக்குகின்றனா். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் உடல் நலம் குறித்து கேட்டறிவதோடு, முதியோா், கா்ப்பிணிகள், குழந்தைகள் உடல் நலத்தையும் கேட்டறிகின்றனா். இவா்களில் யாருக்காவது கரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தால் அவா்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. நோய் பாதிப்பு தீவிரமாக இருந்து, அவா்கள் வெளியே செல்லாமல் வீட்டில் சிகிச்சை செய்துகொண்டிருப்பது தெரியவந்தால், ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

கரோனா பாதித்து வீட்டுத்தனிமையில் இருப்பவா்கள், எந்த வகையான பாதுகாப்புடன் இருக்கவேண்டுமென்பது குறித்தும், எக்காரணத்தைக்கொண்டும் நலவழித் துறையின் வழிகாட்டுதலை மீறி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் அங்கன்வாடி ஊழியா்கள் மூலம் கரோனா பாதித்த குடும்பத்துக்கு பொருள்கள் வாங்கித் தருவது குறித்தும் விளக்கப்படுகிறது. நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் அங்கன்வாடி ஊழியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தி, இதுகுறித்து ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.