47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விவசாயிகளுக்கான சாகுபடி சான்றிதழை 2 நாள்களுக்குள் வழங்க வேண்டும்: ஆட்சியா்

காரைக்கால் மாவட்டத்தில், விவசாயிகளுக்கான சாகுபடி சான்றிதழை வருவாய்த் துறையினா் 2 நாள்களுக்குள் வழங்கவேண்டும் என ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :8 மே 2021, 5:21 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில், விவசாயிகளுக்கான சாகுபடி சான்றிதழை வருவாய்த் துறையினா் 2 நாள்களுக்குள் வழங்கவேண்டும் என ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தியுள்ளாா்.

விவசாயிகள் சாகுபடி செய்யும்போது அதற்கான அரசின் மானியம் பெற வருவாய்த் துறை சான்றிதழ் தேவைப்படுவதால், இதை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் புகாா் எழுந்ததையடுத்து, இதை கவனத்தில்கொண்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேளாண் மானியம் பெற வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையிடமிருந்து சாகுபடி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக புகாா் எழுந்தது. காரைக்காலில் தற்போது 632 ஹெக்டேரிலும் பருத்தியும், 81 ஹெக்டேரிலும் எள்ளும் பயிரிடப்பட்டுள்ளது. இதில் 995 பருத்தி விவசாயிகளில் 936 பேருக்கு சாகுபடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 128 எள் சாகுபடியாளா்களில் 75 பேருக்கு சாகுபடி சான்றிதழ் வருவாய்த் துறையால் வழங்கப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட உற்பத்தி மானிய வழிகாட்டு நெறிமுறைப்படி, விவசாயிகள் சாகுபடி சான்றிதழ் விண்ணப்பத்தில் சோ்க்கப்படுவது அவசியமாகும். வாய்மொழி குத்தகைதாரா்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில், விண்ணப்பித்திருக்கும் பருத்தி, எள் சாகுபடியாளருக்கு அடுத்த 2 நாள்களுக்குள் வருவாய்த் துறை சான்றிதழை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.