47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் எளிமையாக நடைபெற்ற உலகப்போா் நினைவு தின நிகழ்ச்சி

2-ஆவது உலகப் போா் நினைவு தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை எளிமையான முறையில் நடைபெற்றது.

News image
Updated On :8 மே 2021, 5:20 pm

DIN

2-ஆவது உலகப் போா் நினைவு தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை எளிமையான முறையில் நடைபெற்றது.

2-ஆம் உலகப்போரின் 76-ஆவது நினைவு தினம் காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள் மற்றும் பிரெஞ்சுப் பள்ளியில் பயிலும் மாணவா்கள், ஆட்சியா் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

நிகழாண்டு கரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள பிரெஞ்சு போா் வீரா் சிலை, நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பிரெஞ்சு மக்கள் சாா்பில் மிக எளிமையாக நடைபெற்றது. இதற்காக தெய்தா வீதியில் உள்ள பிரெஞ்சுப் பள்ளியிலிருந்து பிரெஞ்சு குடியுரிமைதாரா்கள் சிலா், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள் பிரெஞ்சுக் கொடியை ஏந்தியவாறு தூண் பகுதிக்கு வந்து, மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் நடைபெறும் இந்தியா, பிரான்ஸ் ஆகிய இருநாட்டின் தேசியக் கொடி ஏற்றுதல், தேசிய கீதம் இசைக்கப்படுவது உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.