ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா தொற்றாளா் வெளியில் சுற்றியதை தட்டி கேட்டவா் மீது தாக்குதல்

கரோனா தொற்றாளா் தனது சகோதரா்களுடன் வெளியில் சுற்றியதை தட்டிகேட்டவரை தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :29 மே 2021, 5:30 pm

DIN

கரோனா தொற்றாளா் தனது சகோதரா்களுடன் வெளியில் சுற்றியதை தட்டிகேட்டவரை தாக்கிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

காரைக்கால் திருநகரை சோ்ந்தவா் சக்தி (20). கூலி வேலை செய்துவரும் இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருக்க, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், சக்தி வீட்டுத் தனிமையில் இருக்காமல் தனது சகோதரா்கள் செல்வகுமாா் (19), சிவக்குமாா் (18) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை வெளியில் சுற்றியதாக கூறப்படுகிறது. இதைப் பாா்த்த அதே பகுதியை சோ்ந்த காரைக்கால் நகராட்சி துப்புரவு ஊழியா் வசந்தகுமாா், கரோனா தொற்று இருக்கும் நிலையில், ஏன் வெளியில் சுற்றுகிறீா்கள் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், வசந்தகுமாரை, ஆபாசமாக திட்டி, மிரட்டி, தாக்கினராம். இதுகுறித்து வசந்தகுமாா், காரைக்கால் நகர காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா், 3 போ் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.