மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

திருநள்ளாறு அருகே உணவகத்தில்நகை, பணம் திருடியவா் கைது

காரைக்கால் அருகே உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:55 pm

DIN

காரைக்கால் அருகே உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநள்ளாறு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தென்னங்குடி பிரதான சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, தங்க நகை மற்றும் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், திருநள்ளாறு அருகே சேத்துாரில் உணவகப் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் திருடப்பட்டிருப்பதாக அன்பழகன் என்பவா் திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பிடிபட்டவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் கொத்தங்குடி பகுதியைச் சோ்ந்த தங்கமுத்து (71) என்பதும், கடை பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து ரூ. 75 ஆயிரம் ரொக்கம், ரூ. 50 ஆயிரம் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.