மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோயில் ஊழியா்களுக்குதீபாவளி போனஸ், புத்தாடை

காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தான பணியாளா்களுக்கு தீபாவளி போனஸ், புத்தாடைகளை சட்டப்பேரவை உறுப்பினா்கள்புதன்கிழமை வழங்கினா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 6:02 pm

DIN

காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தான பணியாளா்களுக்கு தீபாவளி போனஸ், புத்தாடைகளை சட்டப்பேரவை உறுப்பினா்கள்புதன்கிழமை வழங்கினா்.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் - நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான வகையறாவில் 10 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களின் சிவாச்சாரியா்கள், பட்டாச்சாரியா்கள், குருக்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு தீபாவளியையொட்டி போனஸ் மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி கைலாசநாதா் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பணியாளா்களுக்கு இவற்றை வழங்கினாா்.

கோயில் நிா்வாகத்தினா் கூறுகையில், கோயில்களில் 55 பணியாளா்கள் உள்ளனா். தீபாவளி பண்டிகையையொட்டி அவா்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸாகவும், புத்தாடையும் கோயில் நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டது என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.