காரைக்காலில் 29 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை 658 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி வரிச்சிக்குடி 5, அம்பகரத்தூா் 4, கோட்டுச்சேரி 4, திருநள்ளாறு 4, நிரவி 4, நல்லம்பல் 3, கோயில்பத்து 2, காரைக்கால் நகரம் 2, நல்லாத்தூா் 1 என மொத்தம் 29 பேருக்கு தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 1,91,276 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 15,531 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,085 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 246 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 98,704 பேருக்கும், 2-ஆவது தவணையாக 23,065 பேருக்கும் என 1,21,769 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...