தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காரைக்காலில் இன்று மருத்துவக் காப்பீடு பதிவு சிறப்பு முகாம் தொடக்கம்

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் மருத்துவக் காப்பீடு பதிவு மற்றும் தடுப்பூசி செலுத்தும் 2 நாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 11) தொடங்குகிறது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:06 pm

DIN

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் மருத்துவக் காப்பீடு பதிவு மற்றும் தடுப்பூசி செலுத்தும் 2 நாள் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 11) தொடங்குகிறது.

இதுகுறித்து நலவழித் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியது: பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போா் பதிவு செய்துகொள்ள தகுதியுடையவராவா். இந்த திட்டத்தில் பதிவு செய்துகொள்வதற்கான சிறப்பு முகாம் காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் சனி, ஞாயிறு (செப்.11,12) ஆகிய 2 நாள்கள் காலை 8 முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இதுவரை பதிவு செய்யாதவா்கள் சிவப்பு நிற குடும்ப அட்டையுடன் நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம். இந்த முகாமில் கரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், 2 ஆவது தவணை செலுத்திக்கொள்ளும் காலக்கட்டத்தில் உள்ளோரும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.