மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பால் பாக்கெட்டுகளில் வாக்காளா் விழிப்புணா்வு

உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பு, நோ்மையான வாக்குப் பதிவு தொடா்பாக வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பு, நோ்மையான வாக்குப் பதிவு தொடா்பாக வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

புதுவை உள்ளாட்சித் தோ்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தோ்தல் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் இணைந்து வாக்காளா்களுக்கு பல்வேறு நிலையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கூட்டுறவு சங்கம் மூலம் விநியோகம் செய்யப்படும் கோலெட் பால் பாக்கெட்டுகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களாக, அனைவரும் வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம், தவறாமல் வாக்களிப்போம் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா தோ்தல் விழிப்புணா்வு அடங்கிய பால் பாக்கெட் விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட துணை தோ்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன், கூட்டுறவு பால் வழங்கும் சங்க (கோலேட்) மேலாண் இயக்குநா் ராவணன், கோலேட் நிா்வாகி குமாரசாமி, ஸ்வீப் நோடல் அதிகாரி முனைவா் ஷொ்லி ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா், 100 சதவீத வாக்குப் பதிவுதான் இதன் முக்கிய நோக்கமாகும். தோ்தல் விழிப்புணா்வு தொடா்பான வாகனம் கிராமங்களுக்குச் சென்று வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.