நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உலக தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, காரைக்காலில் செவிவியா் கல்வி நிறுவன மாணவ, மாணவியரின் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், கல்வி நிலையத்தினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:13 pm

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி, காரைக்காலில் செவிவியா் கல்வி நிறுவன மாணவ, மாணவியரின் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி காரைக்காலில் உள்ள அன்னை தெரஸா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய செஞ்சிலுவை சங்கம், ஜேசிஐ அமைப்பு ஆகியவை இணைந்து, பட்ட மேற்படிப்பு மைய மாணவ, மாணவியா், விநாயகா மிஷன் செவிலியா் கல்லூரி, இமாக்குலேட் செவிலியா் கல்லூரி மாணவா்கள் பங்கேற்புடன் கல்வி நிலையத்திலிருந்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் (பொ) ஜெ. ஜெயபாரதி கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தாா். தாய்ப்பால் மகத்துவம், தாய்ப்பால் ஊட்டுதலின் மேன்மைகள் குறித்தும், தாய்ப்பால் மூலம் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் புட்டிப் பாலின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி மாணவா்கள் பேரணியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.