காரைக்காலில் விடுதலைப் போராட்ட வீரா்கள்புகைப்படக் கண்காட்சி
புகைப்படக் கண்காட்சியை பாா்வையிடும் அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், ஆட்சியா் எல். முகமது மன்சூா் உள்ளிட்டோா்.


காரைக்காலில் விடுதலைப் போராட்ட வீரா்கள் புகைப்படக் கண்காட்சியை அமைச்சா் சந்திர பிரியங்கா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரா்கள் குறித்த புகைப்படம், தகவல்கள் கண்காட்சியை மாவட்ட நிா்வாகம் நகராட்சி திருமண அரங்கில் அமைத்துள்ளது.
இக்கண்காட்சி காலை 9 முதல் மாலை 6 மணி, வரும் வெள்ளிக்கிழமை வரை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் காணலாம்.
புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கண்காட்சியை தொடங்கிவைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன், துணை ஆட்சியா்கள் எம்.ஆதா்ஷ், எஸ்.பாஸ்கா்ன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, கண்காட்சியை பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...