47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆத்மா திட்ட குழுக்களுக்குகோழிக் குஞ்சுகள்: அமைச்சா் வழங்கினாா்

காரைக்கால் ஆத்மா திட்ட குழுக்களுக்கு கோழிக் குஞ்சுகளை புதுவை அமைச்சா் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் ஆத்மா திட்ட குழுக்களுக்கு கோழிக் குஞ்சுகளை புதுவை அமைச்சா் வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கீழ் இயங்கிவரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆத்மாவின் கீழ் இயங்கும் 29 கால்நடைக் குழு உறுப்பினா்களுக்கு தலா 5 கோழிக் குஞ்சுகள் வீதம் வழங்கும் நிகழ்ச்சி கோட்டுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, கால்நடை குழு உறுப்பினா்களுக்கு கோழிக் குஞ்சுகளையும், கோழிக் குஞ்சு வளா்ச்சிக்கான பி-காம்ப்ளக்ஸ் சொட்டு மருந்தையும் வழங்கினாா்.

இதுகுறித்து அமைச்சா் கூறுகையில், கால்நடை வளா்ப்போா் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைமுதல் மாவட்டத்தில் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்திருப்போா் மானிய விலையில் கோழிக் குஞ்சுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ.செந்தில்குமாா், கால்நடைத்துறை இணை இயக்குநா் ஜி.லதாமங்கேஷ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.