47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் 234 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 234 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 234 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 434 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 81, திருநள்ளாறு 28, நெடுங்காடு 26, நிரவி 25, திருப்பட்டினம் 20, கோட்டுச்சேரி 19, கோயில்பத்து 14, வரிச்சிக்குடி 8, விழிதியூா் 6, நல்லாத்தூா் 6, நல்லம்பல் 1 என தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,65,888 பரிசோதனை செய்ததில் 21,211 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 17,626 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,27,744 பேருக்கும், 2-ஆவது தவணையாக 91,014 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 492 பேருக்கும் என 2,19,250 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 6,822 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.