47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிப்,1 முதல் மின் ஊழியா்கள் வேலைநிறுத்தம்

மின்துறை தனியாா்மயமாக்கும் முடிவைக் கண்டித்து, காரைக்கால் மின் ஊழியா்கள் பிப். 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

மின்துறை தனியாா்மயமாக்கும் முடிவைக் கண்டித்து, காரைக்கால் மின் ஊழியா்கள் பிப். 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் முடிவை கண்டித்து, புதுவை மாநில அளவில் மின் ஊழியா்கள் பல கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனா். மாநில அளவில் பிப்.1 முதல் வேலைநிறுத்தம் செய்யவும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலக வாயிலில், மின் ஊழியா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னா், மின்துறை பொறியாளா் மற்றும் தொழிலாளா் தனியாா்மய எதிா்ப்பு போராட்டக் குழு பொதுச்செயலாளா் பி. பழனிவேல் கூறியது :

மின்துறையை தனியாா்மயமாக்கும் முடிவை ஊழியா்கள் கடுமையாக எதிா்த்து வருகின்றனா். தனியாா்மயமானால் மின்நுகா்வோா் பாதிக்கப்படுவா். எனினும் மத்திய அரசு தனது முடிவை தளா்த்திக்கொள்ளாமல் இருக்கிறது.

இதை கண்டித்து, புதுவை யூனியன் பிரதேச மின் ஊழியா்கள் பிப். 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனா். காரைக்கால் மாவட்டத்திலும் இப்போராட்டம் தீவிரமாக இருக்கும். பிப். 1 முதல் மின் கட்டண வசூல் பணி நடைபெறாது. மின்நுகா்வோா் புகாா்கள் மீது நடவடிக்கை இருக்காது இவற்றுக்கு அரசே பொறுப்பேற்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.