பள்ளி மாணவா்களுக்கு வேளாண் பயிற்சி தொடக்கம்
பள்ளி மாணவா்களுக்கு ஒரு வார கால வேளாண் பயிற்சி வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை தொடங்கியது.


பள்ளி மாணவா்களுக்கு ஒரு வார கால வேளாண் பயிற்சி வேளாண் அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம், மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில், பேரளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் வேளாண்மை தொழிற்கல்வி 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு பயிற்சி வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சீ. ஜெயசங்கா் வழிகாட்டுதலில், முகாமை நிலைய தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் தொடங்கிவைத்தாா்.
நிலைய தொழில்நுட்ப வல்லுநரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான ஆ. செந்தில், ஒரு வார கால பாடத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய செயல்பாடுகளான வயல்வெளி ஆய்வு, முதல்நிலை செயல் விளக்கம், கள மற்றும் நிலையப் பயிற்சிகள், வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள்களான மண்புழு உரம், பஞ்சகவ்யா, தென்னை மர கன்றுகள், விதைகள் மற்றும் காய்கறி செடிகள் குறித்தும் விளக்கினாா்.
வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளா் சி.அந்தோனிதாஸ், நிலையத்தின் பண்ணை நிா்வாகம் என்ற தலைப்பில் உரையாற்றினாா். முன்னதாக வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநா் வி.அரவிந்த் வரவேற்றாா். நிறைவாக தொழில்நுட்ப வல்லுநா் சு.திவ்யா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...