ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காரைக்கால் மருத்துவமனையில் இன்று புதுச்சேரி சிறப்பு மருத்துவா்கள் முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் வெள்ளிக்கிழமை (நவ.4) நடைபெறுகிறது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 6:30 pm

DIN

காரைக்கால் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் வெள்ளிக்கிழமை (நவ.4) நடைபெறுகிறது.

காரைக்காலுக்கு மாதம் இரு முறை வெள்ளிக்கிழமைகளில் புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் வந்து சிகிச்சை அளிக்கின்றனா்.

இந்த முகாம் வெள்ளிக்கிழமை காரைக்கால் அரசு மருத்துவமனையில் காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.

குழந்தை அறுவை சிகிச்சை, இருதய சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல் ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவா்கள் இதில் பங்கேற்கின்றனா். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு காரைக்கால் மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.