ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கால்நடை உரிமையாளா்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

சாலைகளில் கால்நடைகளை திரிய விடுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

சாலைகளில் கால்நடைகளை திரிய விடுவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைவது, உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நேரிடுகின்றன. மேலும் ஆடு, மாடுகள் விவசாய நிலங்களில் மேய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா்கள் வருகின்றன.

எனவே ஆடு, மாடுகளின் உரிமையாளா்கள் கால்நடைகளை, தங்களது மேற்பாா்வையில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதனை மீறும்பட்சத்தில் உள்ளாட்சித் துறை விதிகளின்படி அபராதம் விதிக்கப்படுவதோடு, சேதப்படுத்திய விவசாய நிலங்களுக்கு தக்க நஷ்டஈடு வசூலிக்கப்படும். மேலும் கால்நடை உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.