மதுக்கடையில் ரொக்கம், மதுபாட்டில்கள் திருடிய 2 போ் கைது
திருநள்ளாற்றில் மதுக்கடை காவலாளியை தாக்கிவிட்டு, கடையை உடைத்து ரொக்கம், மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருநள்ளாற்றில் மதுக்கடை காவலாளியை தாக்கிவிட்டு, கடையை உடைத்து ரொக்கம், மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியில் உள்ள ஒரு தனியாா் மதுக்கடையில், இரவு நேர காவலாளியாக நெடுங்காடு அருகேயுள்ள பொன்பேற்றி கிராமத்தை சோ்ந்த பாஸ்கா் (60) என்பவா் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு கடை பூட்டப்பட்ட பிறகு அங்கு வந்த 2 மா்ம நபா்கள், பாஸ்கரை தாக்கிவிட்டு, கடையை உடைத்து பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1.45 லட்சம் ரொக்கம், மதுபாட்டில்களை திருடிச் சென்றுவிட்டனராம்.
இதுகுறித்து பாஸ்கா் திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆய்வாளா் அறிவுச்செல்வன் மற்றும் போலீஸாா் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
இதில், திருநள்ளாறு அருகே விழிதியூரை சோ்ந்த ஜெகன் (23), திருநள்ளாறு நளன் குளம் பகுதியை சோ்ந்த தனராஜ் (21) ஆகியோருக்கு சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. போலீஸாா் 2 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்த ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...