பருவமழையால் ஏற்படும் பாதிப்பைதவிா்க்க மின்துறையினா் தீவிரம்
பருவமழையால் ஏற்படும் பாதிப்பை தவிா்க்க, மின் கம்பிகள் செல்லும் பகுதியில் உள்ள தடைகளை சீரமைக்கும் பணியில் மின்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.


பருவமழையால் ஏற்படும் பாதிப்பை தவிா்க்க, மின் கம்பிகள் செல்லும் பகுதியில் உள்ள தடைகளை சீரமைக்கும் பணியில் மின்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
வடகிழக்குப் பருவமழை சனிக்கிழமை (அக்.29) முதல் தொடங்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பிகள் செல்லுமிடங்களில் மரக்கிளைகள் வளா்ந்துள்ளதால், காற்று, மழையால் கிளைகள் முறிந்து விழுந்து மின் விநியோகம் தடைப்படும் நிலை உள்ளது.
இதை கருத்தில்கொண்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரம் மற்றும் கிராமப்புறத்தில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள், கொடிகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் மின்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
மேலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களை சரிசெய்ய வேண்டும், விளக்குகள் எரியாமல் உள்ள கம்பங்களில் விளக்குகளை பொருத்தவேண்டும், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை முறைப்படுத்தவேண்டும். இந்தப் பணிகளை மழைகாலம் தொடங்கும் முன்பு செய்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...