ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மாா்க்கெட் வளாகத்தை முழுமையா கபயன்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தல்

காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட நேரு மாா்க்கெட் வளாகத்தில் அனைத்து வியாபாரங்களும் தொடங்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் புதிதாக கட்டப்பட்ட நேரு மாா்க்கெட் வளாகத்தில் அனைத்து வியாபாரங்களும் தொடங்கப்படாததால் மக்கள் அவதிப்படுகின்றனா்.

காரைக்காலில் ரூ. 10.05 கோடியில் நேரு மாா்க்கெட் புதிய வளாக கட்டுமானப் பணி கடந்த 2017 இல் தொடங்கப்பட்டு, 2020, அக்டோபரில் திறக்கப்பட்டது. எனினும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெறவில்லை. பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதைத்தொடா்ந்து, கடந்த 2 ஆம் தேதி முதல் மீன் வியாபாரிகள் இந்த புதிய வளாகத்தில் வியாபாரத்தை தொடங்கினா். மளிகை, காய்கனி உள்ளிட்ட பிற வியாபாரிகள் தற்காலிக இடத்திலேயே வியாபாரம் செய்துவருகின்றனா். செப். 5 ஆம் தேதி முதல் வளாகம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டாலும், அவ்வாறு நடைபெறவில்லை.

மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை புதிய வளாகத்திலும், காய்கனி, மளிகை போன்றவற்றை அங்கிருந்து 400 மீ. தூரத்தில் உள்ள தற்காலிக வளாகத்திலும் வாங்கவேண்டியிருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனா்.

நகராட்சி நிா்வாகத்தின் கடைகள் ஒதுக்கீட்டு முடிவுக்கும், வியாபாரிகளின் எதிா்பாா்ப்புக்கும் இணக்கம் ஏற்படாததால் இந்தப் பிரச்னை நீடிப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் தலையிட்டு விரைவாக தீா்வு காணவேண்டும். புதிய வளாகத்தில் அனைத்து வியாபாரமும் நடைபெற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.