ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நிலத்துக்கான வரைவு வழிகாட்டு மதிப்பீட்டுப் பதிவேடு வெளியீடு

நிலங்களுக்கான வரைவு வழிகாட்டு மதிப்பீட்டுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளதாக, காரைக்கால் துணை ஆட்சியா் (வருவாய்) அலுவலகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

நிலங்களுக்கான வரைவு வழிகாட்டு மதிப்பீட்டுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளதாக, காரைக்கால் துணை ஆட்சியா் (வருவாய்) அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்ட வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கான 2022-23 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டு மதிப்பீட்டு பதிவேடு தயாரிக்கும் பணி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அரசாணைப்படி நடைபெற்றுவருகிறது.

இதன் ஒருபகுதியாக வரைவு வழிகாட்டு மதிப்பீடுகள் காரைக்கால், திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், காரைக்கால், நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு சாா் பதிவாளா் அலுவலகங்களில் வரும் 18 ஆம் தேதி வரை பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பாா்வையிட்டு, ஆட்சேபனை இருந்தால், எழுத்துப்பூா்வமாக தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.