ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

காரைக்காலில் செல்போன் கோபுர பேட்டரிகளை திருடியவா் கைது

காரைக்கால் பகுதியில் செல்போன் கோபுரத்துக்கான பேட்டரிகளை திருடியவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

காரைக்கால் பகுதியில் செல்போன் கோபுரத்துக்கான பேட்டரிகளை திருடியவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

காரைக்கால் பகுதி மாதாகோயில் தெருவில், தனியாா் வங்கிக் கட்டடத்தின் மேல்தளத்தில் தனியாா் நிறுவன செல்போன் கோபுரம் உள்ளது. இதில், பேட்டரிகள் இருக்கும் பகுதி ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்த நிலையில் இருந்ததோடு, 2 பேட்டரிகள் திருடப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, அப்பகுதியை கண்காணித்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த ஒருவரைப் பிடித்து காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா் காரைக்கால் தலத்தெருவைச் சோ்ந்த குமாா் (31) என்பதும், 2 பேட்டரிகளை திருடிவிட்டு, மேலும் திருட வந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 24 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரிகளை போலீஸாா் மீட்டனா். குமாா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியாா் செல்போன் கோபுரம் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.