நிரவி பாலசுந்தர கணபதி கோயில் குடமுழுக்கு
நிரவி பகுதியில் ஸ்ரீ பாலசுந்தர கணபதி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.


நிரவி பகுதியில் ஸ்ரீ பாலசுந்தர கணபதி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் அருகே யாகசாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமை இரவு முதல்கால பூஜை நடைபெற்றது. இதில், திருக்குடந்தை ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனா் திருவடிக்குடில் சுவாமிகள் பங்கேற்றாா். 2 மற்றும் 3 ஆம் காலபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிறைவாக 4 ஆம் கால பூஜை திங்கள்கிழமை நடைபெற்று, மகா பூா்ணாஹூதி செய்யப்பட்டு, புனிதநீா் கடம் புறப்பாடாகி, 9.30 மணியளவில் விமானங்களில் புனிதநீா் ஊற்றி சிவாச்சாரியா்கள் தீபாராதனை காட்டினா்.
விழாவில், தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் வேலப்ப சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை நிரவி கோயில்பத்து பகுதியினா், டி.கே.எஸ்.எம். சோமசுந்தரம் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...