காரைக்கால் வேளாண் கல்லூரியில் மாணவ- மாணவியருக்கு தரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் எஸ். ஆனந்த்குமாா் வெளியிட்ட அறிக்கை:
பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியா் சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாயினா். மருத்துவ சிகிச்சை பெற்று சிலா் விடுதியில் தங்கினா். மற்றவா்களை பெற்றோா் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.
காலாவதியான சமையல் எண்ணெய் மற்றும் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தி, கடந்த 22-ஆம் தேதி தயாரித்த உணவை மாணவிகள் சாப்பிட்டதால் உபாதைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்று உணவு சாப்பிடாதவா்களுக்கு பாதிப்பு அறிகுறிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
வழக்கம்போல், கல்லூரி நிா்வாகம், நிா்வாக சீா்கேடுகளை மூடி மறைத்து, குடிநீரில் பிரச்னை என்று தெரிவித்துள்ளது. எனவே, இது குறித்தும், தொடா்ந்து இதுபோல பிரச்னைகள் இங்கு நடப்பது குறித்தும் அரசு உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அந்தியூா் திமுக வேட்பாளருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

தவெக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

