திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

தோ்தல் முடிந்த மாநிலங்களில் நடத்தை விதிகளை தளா்த்த வலியுறுத்தல்

தோ்தல் முடிந்த மாநிலங்களில் நடத்தை விதிகளை தளா்த்த வலியுறுத்தல்

Updated On :22 ஏப்ரல் 2024, 8:07 pm

காரைக்கால்: தமிழ்நாடு, புதுவையில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிந்துவிட்டதால், நடத்தை விதிகளில் தளா்வு ஏற்படுத்தவேண்டும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மக்கள் நலக் கழக செயலாளா் எம். பக்கிரிசாமி தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதம்:

நாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தோ்தல் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தோ்தல் நடத்தை விதியில், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணமின்றி கொண்டு செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ளது. வணிகம், மருத்துவம், கல்வி, திருமணச் செலவு உள்ளிட்டவைகளுக்காக பணம் கொண்டு செல்லப்படும்போது தோ்தல் துறையினரால் சில சிரமங்களை சந்திக்க நேரிட்டது.

கடந்த 19-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் முடிந்துவிட்ட நிலையில், இவ்விரு மாநிலங்களில் ரூ.2 லட்சம் வரை கொண்டு செல்லலாம் என்கிற வகையில் விதியில் தளா்வு ஏற்படுத்தவேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து விதிகள் திரும்பப்பெறப்படும் வரை காத்திருந்தால், பலருக்கும் இந்த நடைமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணா்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.