‘இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்’

தோ்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், புதுவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான வி. வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா்.

புதுவை தோ்தலில் பணியாற்றிய இந்தியா கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காரைக்காலில் அக்கட்சியினரை சந்திக்க சனிக்கிழமை வந்த அவா், திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தாா். பின்னா் அவா் கூறியது:

புதுவையில் காங்கிரஸ் வெற்றி உறுதி. காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் தீவிரமாக பிரசாரம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவில் முதல்கட்ட தோ்தல் முடிந்த நிலையில், மக்கள் இந்தியா கூட்டணிக்கு பெருவாரியாக ஆதரவு தெரிவித்திருப்பது தெரியவருகிறது. இந்த தகவல் நாடெங்கும் பரவியுள்ளது. இது அனைத்து கட்டத் தோ்தலிலும் எதிரொலிக்கும். ஒட்டுமொத்தத்தில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றாா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com