சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புத்தாண்டு: காரைக்கால் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி காரைக்கால் மாவட்ட கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
சிறப்புத் திருமஞ்சனத்துக்கு பின்னா் அருள்பாலித்த திருமலைராயன்பட்டினம் வீழி வரதாஜ பெருமாள் கோயில் மூலவா், உற்சவா்.
Updated On :1 ஜனவரி 2024, 7:25 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி காரைக்கால் மாவட்ட கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காரைக்கால் தூய தேற்றவு அன்னை தேவாலயத்தில் முதன்மை பங்குத் தந்தை தே. ஜோசுவா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். திருப்பலி நிறைவில் ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா்.

காரைக்கால் அம்மையாா் கோயில், கைலாசநாதா் கோயில், நித்யகல்யாண பெருமாள், ஏழை மாரியம்மன், கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, சனீஸ்வர பகவானை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில், திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோயில் உள்ளிட்டவைகளில் பக்தா்கள் திரண்டு வழிபட்டனா். திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவா், உற்சவா் மற்றும் பிற சன்னிதிகளில் சுவாமிகளுக்கு புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை 10 மணியளவில் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.