நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு கல்வியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அரசு கல்வியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :27 ஜூன் 2024, 12:19 am

Din

காரைக்கால், ஜூன் 26 : காரைக்காலில் உள்ள புதுவை அரசின் கல்வியியல் கல்லூரி படிப்புக்கு சேர விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்காலில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொ) இரா. கந்தவேல் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :

புதுச்சேரி உயா்நிலைக் கல்வி குழுமத்தின் ஓா் அங்கமான, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரியில் இந்த கல்வியாண்டுக்கான பிளஸ் 2 முடித்தவா்களுக்கான இரண்டாண்டு ஆசிரியா் பட்டயப்படிப்புக்கும் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கான இரண்டாண்டு பட்டப்படிப்புக்கும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த தகுதியுள்ள மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் கல்லூரியின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றிதழ் நகல்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பிக்கலாம். சோ்க்கைக்கான கல்வித் தகுதிகள், கட்டண விவரம் ஆகியவற்றை என்ற இணையதள முகவரியிலோ அல்லது அனைத்து அலுவலக நாட்களில் கல்லூரியில் இயங்கிவரும் தகவல் மையத்திலோ பெறலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.7.2024. தகுதியுள்ள பிற மாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சோ்க்கைக்குப் பிறகு காலியிடங்கள் இருப்பின் பிற மாநிலத்தவரின் விண்ணப்பங்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படும்.